உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் உலகம் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் கோவில் நடை அடைக்கப்பட்டது.இதனால் கோவிலில் நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர் மேலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நாட்டில் பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நலன் கருதி தந்வந்திரி யாகம் மற்றும் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனீஸ்வர பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின் தியாகராஜர் சன்னதியில் உலக மக்கள் நன்மை வேண்டியும் மற்றும் கொரோனா பாதிப்பு நீங்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பாரிஜாத மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால் உலக மக்கள் நன்மைக்காக பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !