உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை தேர்த்திருவிழா திருக்கல்யாண உற்சவம்

சித்திரை தேர்த்திருவிழா திருக்கல்யாண உற்சவம்

இடைப்பாடி: இடைப்பாடியில், சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்வாமி திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, ஏப்ரல் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஸ்வாமியின் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் ஸ்வாமிக்கும், ஸ்ரீதேவகிரி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஸ்வாமி திருக்கல்யாணத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழுவை சேர்ந்த நகராட்சி சேர்மன் கதிரேசன், துணை சேர்மன் ராமன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவில், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !