மனம் திருந்திய வேடன்
ADDED :2021 days ago
கிருணு என்னும் மகரிஷியின் கண்களில் வெளிப்பட்ட வீரியத்தை பாம்பு ஒன்று விழுங்கியது. அந்த பாம்பின் வயிற்றில் பிறந்த குழந்தைக்கு ரத்னாகரன் என பெயரிட்டு வேடர்கள் சிலர் வளர்த்தனர். வேடர் குலப் பெண்ணை மணந்த ரத்னாகரன், பிழைப்புக்காக வழிபோக்கர்களிடம் கொள்ளையடித்தார்.
ஆனால் குடும்பத்தினர் யாரும் ஏற்க விரும்பவில்லை. அதன்பின் குடும்பத்தை விட்டு விட்டு, நல்வழிகாட்டும்படி ரிஷிகளிடம் வேண்டினார். அவர்கள் ‘மரா’ என்னும் மந்திரத்தை உபதேசித்தனர். அதை வேகமாக உச்சரிக்க ‘ராம ராம’ என ஒலித்தது. உணவு, உறக்கத்தை தொலைத்து விட்டு ஜபித்ததால் புற்றால் மூடப்பட்டார். அவரே ‘வால்மீகி முனிவர்’ என பெயர் பெற்றார்.