உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணன் கோவிலில் சுதர்சன தன்வந்திரி யாகம்

கிருஷ்ணன் கோவிலில் சுதர்சன தன்வந்திரி யாகம்

சேலம்: ஊரடங்கு உத்தரவால், சவுராஷ்டிரா சமூகத்துக்கு சொந்தமான, சேலம், பட்டைக்கோவில் அருகேவுள்ள, கிருஷ்ணன் கோவிலில், பட்டாச்சாரியார்கள் மட்டும், தினமும் நித்ய பூஜை செய்து வந்தனர். நேற்று, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து, மக்கள் விடுபட, உலக நன்மை வேண்டி, பட்டாச்சாரியார்கள் மட்டும், சுதர்சன மகா தன்வந்திரி யாகம் நடத்தினர். அதில், ஏராளமான மூலிகைளை சமர்ப்பித்து, பூர்ணாஹூதியுடன் நிறைவு செய்தனர். யாகத்தில் வைத்து பூஜித்த கலசத்தின் புனிதநீரால், மூலவர் கிருஷ்ணர், உற்சவர் சிலைகளுக்கு அபி?ஷகம் செய்து பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !