உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆச்சரியப்பட்ட இளைஞன்

ஆச்சரியப்பட்ட இளைஞன்

ஒருநாள் தோழரான அபூபக்கருடன் பேசியபடியே நடந்து சென்றார் நாயகம். வழியில் இளைஞன் ஒருவன் ஆட்டுமந்தையுடன் சென்று கொண்டிருந்தான். அந்த இளைஞனிடம், ‘‘தாகமாக இருப்பதால் குடிப்பதற்கு கொஞ்சம் ஆட்டுப்பால் தரலாமா?’’ எனக் கேட்டார் அபூபக்கர். ‘‘ஐயா! இவை எனக்கு சொந்தமானது அல்ல. இவற்றின் எஜமானர் என்னிடம் நம்பி ஒப்படைத்துள்ளார்’’ என்றார். பிறர் பொருளை பாதுகாத்து ஒப்படைக்க வேண்டும்’’ என்றான். உடனே அவனிடம், ‘‘கிடாய் ஆடு தீண்டாத பெட்டை ஆடுகள் இதில் உள்ளதா?’’ எனக் கேட்டார் நாயகம். குறிப்பிட்ட ஒரு ஆட்டை அவன் சுட்டிக் காட்டினான். மந்திரம் உச்சரித்தபடி அதன் மடுவைத் தடவ பால் சுரந்தது.  ‘கிடா அண்டாத ஆட்டில் பால் கிடைக்குமா?’’ என ஆச்சரியப்பட்டான் இளைஞன். நாயகத்தின் கைகளை பிடித்த அவன், ‘‘தாங்கள் சொன்ன மந்திரத்தை நானும் கற்க முடியுமா?’’ எனக் கேட்டான். அவனது தலையைத் தடவியபடி, ‘‘நீ மட்டுமல்ல; உலகத்தாருக்கும் கற்பிக்கலாம்’’ என சொல்லிக் கொடுத்தார்.
அந்த இளைஞனே பிற்காலத்தில் செல்வந்தராகத் திகழ்ந்த ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !