ஆடையில் அக்கறை வேண்டும்
ADDED :2036 days ago
கிராமத்தில் குடியிருக்கும் தன் பெற்றோரைக் காணச் சென்றார் போதகர் ஒருவர். வழியில் சேற்றில் புரண்ட எருமைகள் சென்று கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று போதகர் மீது உரசி செல்லவே, அவரது வெள்ளை ஆடையில் கறைபட்டது. வீட்டிற்கு வந்த பின் மாற்றுடையை அணிந்து கொண்டு, வெள்ளை ஆடையை துவைத்தார். இதுபோலவே நமக்கு மனம் என்னும் வெள்ளை ஆடையில் பொய், களவு, காமம், கோபம் போன்ற எருமைகள் உரசி கறை படிகின்றன. அதனால் பாவச்சுமையால் மனிதர்கள் வாடுகின்றனர். துவைத்தால் ஆடையிலுள்ள கறை நீங்கிவிடும். மனதை துாய்மைப்படுத்த ஆண்டவரின் துணை வேண்டும். செய்த பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டு திருந்தினால் கறை படியாமல் காப்பார்.