உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊரடங்கால் குறைந்த கங்கை மாசு

ஊரடங்கால் குறைந்த கங்கை மாசு

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால், கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

ஊரடங்குக்கு முன், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில், நதி நுழையும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும், கங்கை நதி, குளிப்பதற்கு கூட தகுதியற்றதாக இருந்தது. தற்போது, நதி பாயும் தடத்தில், 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 27 இடங்களில், குளிப்பதற்கும், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்ததாக, கங்கை உள்ளது. கங்கையில், தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளதால், நதி நீர் மேம்பட்டுள்ளதாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !