உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளாச்சேரி ராமர் கோயிலில் சிறப்பு ஹோமம்

விளாச்சேரி ராமர் கோயிலில் சிறப்பு ஹோமம்

மதுரை: விளாச்சேரியில் உள்ள ராமர் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு நேற்று ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

உலகையே அச்சுருத்தி,  ஆட்டிப் படைக்கும் இந்தக் கொடூரத் தொற்று நோயிலிருந்து விடுபட்டு,  மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு வாழவும், நாட்டில் நிலவும் அச்சம்  நீங்கவும்,   மக்கள் பெருங் குழப்பத்திலிருந்து விடுபட்டு நலம் பெற வேண்டி   சிறப்பு  அர்ச்சனை,  வழிபாடு நடைபெற்றது.  நாட்டில்  மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. கோயில் நிர்வாகிகள் வழிபாடு ஏற்பாடு  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !