சீதாராமர் கோயிலில் ராமநவமி விழா
ADDED :2031 days ago
காரியாபட்டி: காரியாபட்டி அச்சங்குளத்தில் உள்ள பட்டாபிஷேகம் சீதாராமர் கோயிலில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. ராம பிரானுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு, பக்தர்கள் ஒவ்வொருவராக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை சுந்தரகணபதி ஐயர் செய்திருந்தார்.