உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பலவழிகளில் நன்மை வரும்

பலவழிகளில் நன்மை வரும்

* பிறரைப் பற்றிக் குறை சொல்பவர்களை விட்டு விலகினால் பலவழிகளில் நன்மை வந்து சேரும்.   
* முன்னோர்கள் நமக்காக எழுதிய நுால்களில் உள்ள கருத்துக்களை பின்பற்றி வாழ வேண்டும்.
*  ‘நான்’ என்னும் அகந்தை எண்ணத்தை அகற்றினால் நன்மை நமக்குத் தான்.  
* இரக்க குணத்தால் பிறர் செய்யும் குற்றங்களை மன்னிக்க பழகுங்கள்.  
* உண்மை மற்றும் நேர்மையின் பாதையில் மனிதன் நடக்க வேண்டும்.
* மக்களுக்கு தொண்டு செய்வது, பலன் கருதாமல் பிறருக்கு உதவுவது போன்றவை கடவுளுக்கே செய்த பணியாக ஏற்கப்படும்.
* கடவுளுக்கு செய்யும் தொண்டு, குருநாதருக்கு செய்யும் சேவை, அடியாருக்கு செய்யும் உதவி இவற்றால் கிடைக்கும் புண்ணிய பலன் ஒன்றே.
* வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துவோரிடம் பழகுவது கூடாது.  
* இஷ்டப்படுவதை எல்லாம் நைவேத்யம் செய்யாமல், புனித நுால்களில் கூறப்பட்டுள்ள பொருட்களை மட்டுமே கடவுளுக்கு பிரசாதமாக படைக்க வேண்டும்.
* கடவுளுக்கு நைவேத்யம் செய்யாத உணவை உண்பது கூடாது.
* கடவுளுக்கு படைத்த உணவு, தீர்த்தம், சந்தனம், மலர், தாம்பூலத்தை பிரசாதமாக கருத வேண்டும்.
* பலனுக்காக மட்டுமில்லாமல் கடவுளின் திருவுள்ளம் மகிழும் விதத்தில் பணியில் ஈடுபட வேண்டும்.  – சொல்கிறார் ராமானுஜர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !