ஊரடங்கை மீறி நடந்த பங்குனி உத்திர திருவிழா: 9 பேர் மீது வழக்கு
ADDED :2016 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஊரடங்கு உத்தரவை மீறி பங்குனி உத்திர திருவிழா நடத்தியதாக, ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலயில், திருவண்ணாமலை அடுத்த மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கடந்த, 6ல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், பங்குனி உத்திர திருவிழா நடத்தப்பட்டது. இது குறித்து, மேல் சோழங்குப்பம் வி.ஏ.ஓ., இமானுவேல் ஜெயக்குமார், கடலாடி போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி, ஆறுமுகம், சுப்பிரமணி, அண்ணாசாமி, குமரன் உள்பட, ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.