உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின்றி நடந்த பாலிகை விடுதல்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின்றி நடந்த பாலிகை விடுதல்

திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சுவாமி திருக்கல்யாண விழாவில், பாலிகை விடுதல் நிகழ்வு  பக்தர்களின்றி நடந்தது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண விழா, கடந்த, 6ல், நடந்தது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தப்பட்டு நலங்கு உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று, கோவில் பிரம்ம தீர்த்தக்கரையில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது.  ஊரடங்கு உத்தரவால், பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்,  கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று, சமூக இடைவெளியுடன், விழாவை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !