உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளெல்லாம் நல்ல நாளே

நாளெல்லாம் நல்ல நாளே

* தினமும் காலையில் எழுந்து தியானம் செய்யுங்கள். வாழ்வின் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருக்கும்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம் கொடுங்கள். எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தையும் கடைபிடியுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். தேவைக்கு மட்டுமே பேசுவது நல்ல குணமாகும்.
* அன்றாட செயல்களைத் திட்டமிட்டு பணியாற்றுங்கள். தவறாமல் நாட்குறிப்பு எழுத மறக்காதீர்கள்.
* எளிய வாழ்க்கையும், உயரிய சிந்தனையும் வாழ்வின் லட்சியமாக இருக்கட்டும்.
* காலையில் கண் விழித்த போதும், இரவில் படுக்கச் செல்லும் போதும் கடவுளை மனம் ஒன்றி பிரார்த்தனை செய்யுங்கள்.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். பிறருக்கு தொண்டு செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சத்துள்ள எளிதில் செரிக்கும் உணவு வகைகளை மட்டும் உண்ணுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்லுங்கள். தினமும் கடவுளின் திருநாமத்தை ஜபிக்கத் தவறாதீர்கள்.
* தன்னலத்தை மறந்து உலகமே நம் குடும்பம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் செயலாற்றுங்கள்.
-  வாழ்த்துகிறார் சிவானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !