உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கலையிழந்த தமிழ் வருட பிறப்பு

கோவில்களில் கலையிழந்த தமிழ் வருட பிறப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பிரசித்திபெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று வழக்கமான பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் வழக்கமாக தமிழ் புத்தாண்டு தினத்தில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், நேற்று நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவிலில், தேகளீசபெருமாள் கருடசேவை உள்ளிட்ட எந்த சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. பக்தர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக ஆகம விதிப்படி பட்டாச்சாரியர்கள் மட்டுமே பூஜைகளை செய்தனர். அதேபோல் வீரட்டானேஸ்வரர் கோவிலிலும் சிவாச்சாரியர்கள் மட்டுமே வழக்கமான பூஜைகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோவில்களில் மக்கள் கூட்டம் இன்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !