உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

குன்றத்து கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

திருப்பரங்குன்றம், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

கொரோனா தடை உத்தரவால் மூலவருக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி ரத்து செய்யப்பட்டது. அன்னதானம், விளக்கு பூஜையும் ரத்தானது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. ஊரடங்கு நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தினமும் கால பூஜை மட்டும் நடைபெறும்.திருநகர் சித்தி விநாயகர் கோயில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயில் மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை முடிந்து காய்கறி, பழ அலங்காரம் செய்யப்பட்டது. விளாச்சேரி வெங்கடேசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !