பச்சடி பரிமாறும் முன்
ADDED :2022 days ago
ஒருமுறை காஞ்சிப்பெரியவர் புத்தாண்டன்று உணவில் இடம் பெறும் வேப்பம்பூ பச்சடி பரிமாறுவது குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.
“ வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகிய ஐந்தும் பச்சடியில் இடம் பெற வேண்டும். பேருக்கு கொஞ்சமாக வைக்காமல், அதிகமாக செய்வது அவசியம். முதலில் அம்பிகைக்கு ஒரு கிண்ணம் நிறைய வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். அப்போது என்ன கோரிக்கை வைத்தாலும் அவள் நிறைவேற்றி வைப்பாள்.
அடுத்ததாக கணவருக்கு கொடுத்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் கணவரின் அன்பு பூரணமாக கிடைக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொரு கிண்ணம் கொடுப்பது அவசியம். இதனால், நீங்கள் சொல்லும் வேலைகளை அக்கறையுடன் செய்வர். இதன் பிறகே, குழந்தைகள், பெண்கள் பச்சடியை சாப்பிட வேண்டும்” என்றார்.