உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் பூஜாரிக்கு ரூ.1000 உதவி கமிஷனர் அறிவிப்பு

கோவில் பூஜாரிக்கு ரூ.1000 உதவி கமிஷனர் அறிவிப்பு

திருப்பூர்: தமிழக முதல்வர், கோவில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கும், 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார். அதன்படி, வாரிய உறுப்பினர்கள், கொரோனா நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.உதவி கமிஷனர் வெங்கடேஷ் அறிக்கை:தமிழக அரசு அறிவித்துள்ளபடி, கிராம கோவில் பூஜாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு, வங்கி கணக்கின் மூலமாக, நிவாரணம் விடுவிக்கப்படும். வாரிய உறுப்பினர்கள், பெயர், மொபைல் போன் எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க விவரம், அடையாள அட்டை விவரத்தை, உதவி கமிஷனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். நலவாரிய உறுப்பினர்கள், 95978 07245, 94429 19676 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !