அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2004 days ago
தர்மபுரி : தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா நோய் தொற்றால், 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்களின்றி கோவில் பூசாரி தலைமையில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது.