உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி தேர்த்திருவிழா இந்தாண்டு நடக்காது!

அவிநாசி தேர்த்திருவிழா இந்தாண்டு நடக்காது!

 அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் கொண்ட கோவிலுமான, கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும்.

தேர்த்திருவிழா, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அடுத்த மாதம், 8ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, இந்தாண்டு திருவிழா, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது:மாநில அரசின் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு செயலர் ஆகியோர், கோவில்களில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். எனவே, தற்காலிகமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !