திருப்பதி தரிசன டிக்கெட் ரத்து செய்ய அழைப்பு
ADDED :2004 days ago
திருப்பதி: மே, 31 வரை உள்ள திருமலை தரிசனம், சேவா டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ள, ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருமலை தரிசனம், சேவா டிக்கெட்டுகளை ரத்து செய்து, பணம் திரும்ப பெற, helpdesk@ tirumala.org என்ற இணையதளத்துக்கு தங்களுடைய முன்பதிவு விபரம் மற்றும் வங்கி கணக்கு எண் விபரத்துடன் அனுப்ப வேண்டும்.மொபைல் போன் எண் அவசியம். வரும் மே, 31 வரை மட்டும் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம் என ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது.