புத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2003 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த அசேபா நகர் அருகே புத்துமாரியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. இக்கோவிலில் உள்ள நவசக்தி விநாயகர், பாலமுருகன், கருமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு தமிழ்ப்புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடந்து சுவாமிகளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவநாகதேவி, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜையும் நடந்தது. இதே போன்று, எல்லையம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.