உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழைகளுக்கு நிவாரணம் சத்யசாய் சேவா திட்டம்

ஏழைகளுக்கு நிவாரணம் சத்யசாய் சேவா திட்டம்

காரைக்குடி; காரைக்குடி சத்யசாய் சேவா சமீதி கன்வீனர் தெரிவித்துள்ளதாவது:கொரோனா பரவல் தடையால் வீட்டிலிருந்து வேலைக்கு வெளியே செல்ல முடியாமல் பசியால் வாடும் மக்களுக்கு சமீதி சார்பாக உணவு பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை(வெல்லம்) கோதுமை மாவு போன்ற பொருட்கள் வழங்கலாம். தங்களால் இயன்ற அளவு பொருட்களை கொடுத்து உதவி செய்யலாம். இந்த திட்டத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு உதவி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை பொருட்களை காரைக்குடி சத்யசாய் சேவா சமீதியில் கொடுக்கலாம். விவரங்களுக்கு: 99427 68157


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !