உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக சுற்றுலா வந்த ரஷ்ய தம்பதி தி.மலையில் மீட்பு

ஆன்மிக சுற்றுலா வந்த ரஷ்ய தம்பதி தி.மலையில் மீட்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மலை மீது தங்கியிருந்த, ரஷ்ய நாட்டு தம்பதியை போலீசார் மீட்டனர்.

கொரோனா ஊரடங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள, திருவண்ணாமலை போலீசார், மலை மீது யாராவது நடமாடுகிறார்களா? என்பதை ட்ரோன் கேமராவை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர். இதில் இருவர் நடமாடுவது தெரியவே, அவர்களை மீட்டு அழைத்து வந்தனர். விசாரணையில், ரஷ்யா நாட்டின் மாஸ்கோவை சேர்ந்த விக்டர், 30; அவர் மனைவி சாத்தியாயின், 27, என்பது தெரிந்தது. கடந்த ஜனவரி மாதம், இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். திருவண்ணாமலைக்கு வந்தபோது ஊரடங்கு அமலானதால், அங்கேயே தங்கினர்.  பணம் முழுவதும் செலவான நிலையில், மூன்று வேளையும் ரமணாஸ்ரமத்தில் உணவு சாப்பிட்டு விட்டு, மலைப்பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவர்கள் தற்காலிகமாக தங்கவும், உணவுக்கும் போலீசார் ஏற்பாடு செய்தனர். அதேசமயம் தம்பதியை, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !