ரமணாஸ்ரமத்தில் 70வது ஆராதனை விழா
ADDED :2072 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில், 70வது ஆராதனை விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில், 70–வது ஆராதனை விழாவில், ரமணர் சன்னதிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்கள் இன்றி பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. ஊரடங்கு தடை உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.