காஞ்சி பிரளயம் காத்த அம்மன்
ADDED :2030 days ago
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் உலகம் அழியும். ஆனால் காஞ்சிபுரத்தில் மட்டும் பிரளயம் ஏற்படாது. ஏனென்றால் இதை தடுக்கும் ‘பிரளயம் காத்த அம்மன்’ காஞ்சியில் இருக்கிறாள். இவளுக்கு காஞ்சி காமாட்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பவித்ர மண்டபத்தின் எதிரில் சன்னதி உள்ளது. இந்த அம்மன் வழிபட்ட சிவன் பிரளயநாத லிங்கமாக இங்கிருக்கிறார். ஏழு கைகளில் ஆயுதம் ஏந்தியும், ஒரு கையை தொடை மீது வைத்தும் காட்சி தருகிறாள். சித்திரையில் கோடை கால இளநீர் அபிேஷகமும், சிறப்பு அலங்காரமும் நடக்கும்.