உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வராஹ ஜெயந்தி

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் வராஹ ஜெயந்தி

ஸ்ரீமுஷ்ணம் : வராஹ வடிவம் கொண்டு திருமால் பூமிக்கு வந்த நாளே, வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம், திருவிடந்தை, கல்லிடைக்குறிச்சி, கும்பகோணம், திருக்கூடலூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள வராஹ மூர்த்தி தலங்களில், இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று வராஹ ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  உலகத்தை அச்சுறுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடை உத்தரவு அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !