பாலமலை ரங்கநாதர் தேர் திருவிழா ரத்து
ADDED :2078 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள, பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா, ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, பாலமலை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் கூறுகையில்,"கோவிலில் அர்ச்சகர் மட்டும் பங்கேற்கும், முக்கால பூஜை நடந்து வருகிறது. இதில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்தாண்டு சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மே மாதத்துக்கு பிறகு, தமிழக அரசின் உத்தரவுப்படி, கோவில் செயல்படும்," என்றார்.