உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தெந்த கோவிலில் இலவச திருமணம்?

எந்தெந்த கோவிலில் இலவச திருமணம்?

சென்னை: இலவச திருமணம் நடத்த, தேர்வு செய்யப்படும் கோவில்களின் பட்டியல் மற்றும் உத்தேச வரவு - செலவு திட்டத்தை, அனுப்பி வைக்கும்படி, அனைத்து மண்டல இணை கமிஷனர்களுக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், கடிதம் அனுப்பி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:நிதி வசதிமிக்க, 50 கோவில்களில், 4 கோடி ரூபாய் செலவில், ஏழை குடும்பத்தை சேர்ந்த, 10 ஆயிரம் ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தப்படும் என, சட்டசபையில், முதல்வர் அறிவித்தார். அதை செயல்படுத்த, நிதி வசதி உள்ள கோவில்களின் பட்டியலை அனுப்பவும். கோவிலில், போதிய நிதி வசதி; ஒரே முகூர்த்தத்தில், நான்கு அல்லது ஐந்து திருமணங்கள் நடத்துவதற்கான இட வசதி; இடவசதி இல்லாவிட்டால், அருகில் உள்ள சமுதாய கூடங்களில், திருமணம் நடத்த தயார் நிலை.ஒரு திருமணத்திற்கு, 50 பேர் வீதம், 250 பேர் உணவருந்த வசதி ஆகியவற்றுடன், ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்துவதற்கான, உத்தேச செலவு திட்டத்தை, தயாரித்து அனுப்பவும். தேர்வு செய்யப்பட்ட கோவில்களில், இலவச திருமணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை, கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !