அன்னூரில் ஆதரவற்றோருக்கு அர்ச்சகர் உதவி
ADDED :2026 days ago
அன்னூர்: அன்னூரில் ஆதரவற்றோருக்கு, அர்ச்சகர் இரண்டாவது நாளாக, மதிய உணவு வழங்கினார். அன்னூரில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஆதரவற்றோர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அன்னூரைச் சேர்ந்த அர்ச்சகர் பாபு இரண்டாவது நாளாக, நேற்றும், அன்னூர் அக்ரஹாரம் வீதி மற்றும் தர்மர் கோவில் வீதியில் உள்ள ஆதரவற்ற, 100 பேருக்கு, மதிய உணவு வழங்கினார்.