/
கோயில்கள் செய்திகள் / கோயில் நிதியை அரசுக்கு வழங்கக்கூடாது ஸ்ரீவி.,சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்
கோயில் நிதியை அரசுக்கு வழங்கக்கூடாது ஸ்ரீவி.,சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல்
ADDED :2090 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: கோயில் பணத்தில் இருந்து அரசு நிவாரணத்திற்கு நிதி வழங்க கூடாது, அதை கிராமகோயில்களுக்கு ஒதுக்கி 3 வேளை பிரசாதம் வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியதாவது: கோயில்களின் வருமானத்திலிருந்து 10 கோடி ரூபாயை கொரோனா நிதியாக கொடுக்க அறநிலையத்துறை உத்தர விட்டிருப்பது வருந்தத்தக்கது. ஆயிரக்கணக்கான கிராமகோயில்களில் நைவேத்தியம், விளக்கேற்றுவதற்கு கூட நிதி இல்லை. பட்டர்கள், குருக்கள், கிராம பூஜாரிகள் வருமானமின்றி தவிக்கின்றனர். கோயில் நிதியை அரசிற்கு வழங்கும் முடிவை கைவிட்டு கிராம கோயில் பூஜாரிகளுக்கு வழங்கி நைவேத்தியத்திற்கு பயன் படுத்துவதோடு 3 வேளை அன்னதானம் வழங்கி மக்களின் பசியை போக்க வேண்டும், என்றார்.