உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னதான திட்டம் விரிவுபடுத்த இந்து முன்னணி வலியுறுத்தல்

அன்னதான திட்டம் விரிவுபடுத்த இந்து முன்னணி வலியுறுத்தல்

 உடுமலை:கோவில்களின் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி, மக்களுக்கு உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்து முன்னணி மாநிலத்தலைவர் தெரிவித்தார்.

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலைத்துறை கோவில்களின் உபரி நிதியை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில்கள், பழங்காலம் முதல் மருத்துவ கூடங்களாகவும், பசி தீர்க்கும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், கோவில்களில் அன்னதான திட்டத்தை அதிகரித்து, மக்களுக்கு பயன் அளிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆந்திர மாநிலத்தில், திருப்பதி கோவில் மூலம், ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகையை, மடைமாற்றம் செய்வது கோவில்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். எனவே, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.ஊரடங்கு சமயத்தில், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது, பாராட்டத்தக்கது. மே 3ம் தேதிக்குப்பின், தமிழகம் புதிய யுக்தியை கையாளுவது அவசியம். கொரோனா பாதித்தவை, பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி, பாதிப்பு குறைவான பகுதி என மூன்றாக பிரித்து திட்டமிடல் வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !