உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்: தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்: தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

சீர்காழி: கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் வறுமையில் தவிக்கும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டுமென நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்கம் |கோரிக்கை விடுத்துள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்த ஊ ரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல், வருவாய் இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனையடுத்து தமிழக அரசு ஆயிரம் ரூ பாய் பணமும், ரேஷன் பொருட்களையும் வழங்கியது. வரும் மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரிசி வாங்க கூடிய ஒரு கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 328 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனை 45 சதவீதம் உள்ள அரசு மற்றும் அ ரசு சார்ந்த நிறுவனங்களில் பணி பணிபுரிந்து வருபவர்களும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 55 சதவீதம் பேர் ஏழை, எளியவர்களும் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் ஊர டங்கு உத்தரவு மற்றும் திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டதாலும் வேலையின்றி வறுமையில் தவிக்கும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், கிராமக்கோவில் பூசாரிகள் மற்றும் பூஜைப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்பவர்கள், கூலித் தொழிலாளர்களை ஆகியோரை கணக்கிட்டு அவர்களுக்கு இந்த பேரிடர் கால த்தில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் என்பதை உயர்த்தி மாதம் ரூ 5 ஆயிரமாக வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தமிழ்நாடு திருக்கோயில் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !