உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐவர் மட்டுமே பங்கேற்ற முனிஸ்வரர் கோவில் திருவிழா

ஐவர் மட்டுமே பங்கேற்ற முனிஸ்வரர் கோவில் திருவிழா

கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை கோவில் மேடு முனீஸ்வரர் கோவில் திருவிழா, ஐந்து பேர் மட்டுமே நடத்திய சிறப்பு பூஜையுடன் நிறைவடைந்தது. ஊட்டி தாலுக்கா, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, பில்லிக்கம்பை கோவில் மேடு ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விழா நடத்தப்படவில்லை. நேற்று அதிகாலை, கோவில் பூஜாரி சுப்பிரமணி உட்பட, ஊர் மக்கள், ஐந்து பேர் மட்டுமே, கோவில் நடையை திறந்து பூஜை நடத்தினர். குறிப்பாக, நோய்த்தொற்றில் இருந்து மக்கள் விடுப்பட, சிறப்பு பூஜை நடந்தது. ஊர் மக்கள் சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், ஆண்டுதோறும் நடைபெறும் அக்கினி சட்டி ஏந்துதல், பிரசாதம் வழங்குதல், கரக ஊர்வலம், பஜனை, ஆடல் பாடல் மற்றும் கேளிக்கை நிகழ்சிகள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால், உள்ளூர் மக்களை தவிர, பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !