மக்கள் நலனுக்கு சிறப்பு யாகம்
ADDED :2026 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி, வெள்ளக்குட்டி கரடு வினைதீர்க்கும் விநாயகர் கோவில், 34ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று, சிறப்பு யாகம், பூஜை நடந்தது. ஏத்தாப்பூர் ஜெகன் சிவாச்சாரியார் முன்னிலையில், கொரோனா விலகி, மக்கள் அனைவரும் சுபிட்சம் பெறவும், மழை பெய்ய வேண்டியும், யாகம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.