கரபுரநாதர் கோவில் தேரோட்டம் ரத்து
ADDED :2025 days ago
வீரபாண்டி: கரபுரநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடப்பதை போன்று, சித்திரை திருவிழா நடக்கும். சித்ரா பவுர்ணமியில், திரளான பக்தர்கள் முன்னிலையில் தேரோட்டம் சிறப்பாக நடக்கும். தற்போது ஊரடங்கால், கோவில் பூட்டப்பட்டுள்ளதால், சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். அந்த கோவிலில், பக்தர்கள் அனுமதியின்றி, தினமும் மூன்று கால பூஜை மட்டும் நடந்து வருகிறது.