உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் எளிமையாக நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரையில் எளிமையாக நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரை : மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் எளிமையாக நடந்தது. இணையதளம் வழியாக கண்டு, பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா, ஊரடங்கால் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. அதேநேரம், மீனாட்சி திருக்கல்யாணத்தை மட்டும் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி, நேற்று காலை உற்சவர் சன்னிதி சேத்தி மண்டபம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருக்கல்யாண சம்பிரதாயங்கள், விநாயகர் பூஜையுடன், காலை, 9:00 மணிக்கு துவங்கியது. அம்மன் பிரதிநிதியாக, ராஜா பட்டர், சுவாமி பிரதிநிதியாக, செந்தில் பட்டர் இருந்தனர். அம்மன் பச்சைப்பட்டு, சுவாமி வெண்பட்டு, பிரியாவிடை சிவப்பு பட்டு உடுத்தி, மணக்கோலத்தில் எழுந்தருளினர். காலை, 9:20 மணிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை, இணையதளத்தில் உலகம் முழுதும் பக்தர்கள் பார்த்து, பரவசம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !