உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரம்ஜான் சிந்தனைகள்- 13: நிம்மதியாக வாழ்வோம்

ரம்ஜான் சிந்தனைகள்- 13: நிம்மதியாக வாழ்வோம்

தர்மநெறி தவறாமல் நிம்மதியாக வாழும் மூவர் யார் என நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.

* தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பவர் வாழ்வில் ஏமாற்றம் அடைய மாட்டார். ஆனால் சுயநலத்துடன் செயல்படுவோரை இறைவன் கைவிடுவான்.

* பணியில் ஈடுபடும் முன்பு, ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுபவர் துன்பத்தில் சிக்க மாட்டார். ஆனால் உலகில் பலர் யோசிக்காமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பணவிஷயத்தில் நெருக்கடி ஏற்படாமல் இருக்க வரவுக்கேற்ப செலவு இருக்க வேண்டும்.

* நடுநிலையுடன் இருப்பவர் வறுமையின் பிடியில் சிக்க மாட்டார். இரு குடும்பத்திற்கு இடையே அல்லது தம்பதிக்கு இடையே பிரச்னை என்றால், ஒரு சார்பாக பேசுபவர் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஏனெனில் அவர் எதிர்தரப்பினரின் சாபத்திற்கு ஆளாவார்.

இப்தார்: மாலை 6:3௭ மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:22 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !