உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

 உடுமலை: உடுமலை, சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களில், நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.உடுமலை, நெல்லுக்கடை வீதி, சீனிவாசா பெருமாள் கோவிலில், நரசிம்ம ஜெயந்தியையொட்டி லட்சுமி நரசிம்ம சுவாமிகளுக்கு, காலையில், பால், தயிர், மஞ்சள், பன்னீர், உட்பட 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதி பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. பக்தர்கள், வீடுகளில் விரதமிருந்து, நாராயண நாமம் கூறி பிரசாதம் படைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !