குண்டம் இறங்க ஆளில்லை: மரக்கட்டைகள் தேக்கம்
ADDED :2053 days ago
கோவை:தமிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை. இம்மாதத்தில் விழாக்கள், பண்டிகைகள், விசேஷங்கள் அதிகம் இருப்பதால், ஆலயங்களில் பால்குட திருவிழா, குண்டம், பூமி பூஜை நடைபெறுவது வழக்கம். சில கோவில்களில் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்த, குண்டம் இறங்குவது வழக்கம். ஊரடங்கால், கோவில்களில் சித்திரை திருவிழா, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால், கோவில்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், குண்டம் அமைக்க தேவையான மரக்கட்டைகள், கோவில் வாசல்களில் தேங்கி கிடக்கின்றன.