உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்

வால்பாறை: வால்பாறை கோவில் அர்ச்சகர்களுக்கு, பா.ஜ., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், உதவியாளர்களுக்கு, வால்பாறை பா.ஜ., சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன. பா.ஜ., மண்டல பொறுப்பாளர் தங்கவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், நகர தலைவர் சுந்தர்ராஜன், பொதுச்செயலாளர்கள் கார்த்திக், செந்தில்முருகன், நகர இளைஞரணி தலைவர் சுனில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !