உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசியில் தவித்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பினர்

காசியில் தவித்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பினர்

திருப்பூர் : கொரோனா ஊரடங்கால், 45 நாட்களாக காசியில் சிக்கியிருந்த, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 15 பேர், நேற்று அவிநாசி வந்தனர்.

அனைவரும் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, உடுமலை, வெள்ளகோவிலைச் சேர்ந்த, 15 பேர், மார்ச், 16ல், திருப்பூரில் இருந்து ரயிலில், காசி புறப்பட்டு சென்றனர். கயா தரிசனத்தை தொடர்ந்து, 19ம் தேதி காசி சென்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், 45 நாட்களாக அங்கு தவித்தனர். சமீபத்தில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், உத்தர பிரதேச அரசு ஏற்பாட்டில், சுற்றுலா பஸ்சில், சமூக இடைவெளியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு அவிநாசி வந்தனர்.அவர்கள் கூறியதாவது:ஓட்டலில் இருந்து வெளியே வர இயலவில்லை.

அனைத்து பொருட்களும் கிடைத்தன. நாங்களே சமைத்து சாப்பிட்டு, பாதுகாப்புடன் இருந்தோம். கடந்த, 3ல், மருத்துவ பரிசோதனை செய்து, சுற்றுலா பஸ்சில் அனுப்பி வைத்தனர்.அவிநாசி வந்தடைந்ததும், மீண்டும் பரிசோதனை நடந்தது. அதன் பிறகே வீடுகளுக்கு சென்றோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், காசி சென்று வந்தவர்களை, 14 நாட்களுக்கு தனிமையான சூழலில், வீட்டு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !