கொரோனாவிலிருந்து விடு பட திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு அபிஷேகம்
காரைக்கால்: கொரோனா வைரஸிலிருந்து அனைத்து மக்களையும் காக்கும் வகையில் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று சனீபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று. பின் இணையத்தளம் மூலமாக ஒளிபரப்பப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 50 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் கோவில் நடைகள் அடைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நலன் கருதி மற்றும் கொரோனா வைரஸிலிருந்து அனைத்து மக்களையும் காக்கும் வகையிலும் விரைவில் இயல்பு நிலை திரும்பவேண்டி கடந்த இரு வரங்களாக அனுக்கிரக மூர்த்தியாக உள்ள ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.நேற்று சனிக்கிழமை என்பதால் பல இடங்களில் வைரஸ் பரவி வரும் நிலையில் இயல்பு நிலை திரும்ப வேண்டி சனிபகவானுக்கு காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் அபிஷேகம் மற்றும் ஆராதனை கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக நடைபெறும்.பின் அபிஷேகம் மற்றும் ஆராதனை ஆகியவை தேவஸ்தான வலைப்பக்கத்தில் (www.thirunallarutemple.org) இணைக்கப்பட்டுள்ள YOU TUBU சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.