உலக நலன் வேண்டி வடவள்ளியில் வேள்வி
ADDED :1972 days ago
வடவள்ளி: நவாவூர் பிரிவில், உலக நன்மை வேண்டி, ஆவஹந்தி ஹோமம் நடந்தது.வடவள்ளி அடுத்த நவாவூர் பிரிவு, குருசாமி நகரில், மாதந்தோறும் காஞ்சிபெரியவரின் நட்சத்திர நாளான, அனுஷம் நட்சத்திர நாளில், ஆவஹந்தி ஹோமம் நடந்து வருகிறது. இம்மாதத்தின் அனுஷம் நட்சத்திரம் நாளன்று, ஆவஹந்தி ஹோமம் நடந்தது. ஆவஹந்தி ஹோமம் என்பது, உலக நன்மை வேண்டி செய்யப்படும் ஹோமம் ஆகும்.நேற்று காலை, 6:00 மணிக்கு கோ பூஜையும், 6:45 மணிக்கு, ஆவஹந்தி ஹோமமும், 7:30 மணிக்கு, ருத்ர ஜபம் மஹன்யாசம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 6:00 மணிக்கு, சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் நடந்தது.