உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: போட்டியில் வெற்றி

மீனம்: போட்டியில் வெற்றி

இந்த மாதம் சூரியன் 3ம் இடத்தில் நின்று குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மே 24க்கு பிறகு நற்பலனைக் கொடுப்பார். 11ம் இடத்தில் இருக்கும் குருவால் பொருளாதார வளம் மேம்படும். நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குருவின் 5,9 ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடந்தேறும். பணபலத்தை அதிகரிக்கச் செய்வார். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். குடும்பத்தில் சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள். சுக்கிரனால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர் மத்தியில் நெருக்கம் கூடும்.  புதிய உறவினர் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். மே 24க்கு பிறகு பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி மேலோங்கும். ஜுன் 3க்கு பிறகு  பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். கணவன், மனைவி இடையே பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேதுவால் சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்பு உண்டு.பெண்கள் வாழ்வில் குதுாகலம் நிலைக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஆடை, ஆடம்பர பொருள் சேரும்.  சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே 24க்கு பிறகு சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு அரசு வகையில் உதவி கிடைக்கும். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்கள் சீரான லாபம் காண்பர். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். புதனால் பகைவர் தொல்லை, அரசு வகையில் அனுகூலமற்ற போக்கு மே 24க்கு பிறகு மறையும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும்.* வியாபாரிகளுக்கு குருவால் பணவரவு அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.* தரகு, கமிஷன் தொழிலில் மே 24க்கு பிறகு எதிரிகளின் சதி திட்டம் முறியடிக்கப்படும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.* தனியார் துறை பணியாளர்கள் மே 28க்கு பிறகு மேன்மை காண்பர். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.* ஐ.டி., துறையினருக்கு எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும்.* மருத்துவர்களுக்கு மே24க்கு பிறகு வேலையில் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.* வக்கீல்கள் மே 24க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கப் பெறுவர்.  * ஆசிரியர்கள் தடைகளை முறியடித்து வெற்றி காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.* அரசு பணியாளர்கள் மே 24க்கு பிறகு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர்.* பொதுநல சேவகர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.* கலைஞர்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். ரசிகர்களின் மத்தியில் புகழ் பெறுவர். அரசிடம் இருந்து பாராட்டு, விருது கிடைக்கும்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.* அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே விரும்பிய பதவி கிடைக்கும்.   * விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகள் மூலம் அதிக வருமானம் காண்பர். மே 24க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும்.* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மே 24க்கு பிறகு  கல்வி வளர்ச்சி காணலாம். போட்டியில் வெற்றி பெறுவர்.சுமாரான பலன்கள்* தொழிலதிபர்களுக்கு பெண்கள் வகையில் தொல்லை ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.* அரசு பணியாளர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.* போலீஸ், ராணுவத்தினருக்கு திடீர் பயணம், அலைச்சல் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.* விவசாயிகள் சொத்து வாங்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.நல்ல நாள்: மே 14,17,18,19,22,23,24,29,30,31 ஜுன் 1,7,8,9,10,14கவன நாள்:  ஜுன் 2,3,4 சந்திராஷ்டமம்அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: சிவப்பு, வெள்ளைபரிகாரம்:* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு* சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் தரிசனம்* பவுர்ணமியன்று காளிக்கு செவ்வரளி மாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !