கொரோனாவிலிருந்து மீட்க அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு பூஜை
ADDED :2053 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டி ஸ்வயம் திருமேனி பூஜை நடந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், கோயிலில் தினசரி கால பூஜைகள் மட்டும் நடக்கிறது. பக்தர்களை அனுமதிக்க வில்லை. சாளக்கிராமத்தால் உருவான மூலவருக்கு ஸ்வயம் திருமேனி பூஜை நடந்தது. அபிேஷக கால அலங்காரத்துடன், சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.