கொரோனாவை கட்டுப்படுத்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :1973 days ago
உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி விநாயகர் கோவிலில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை நடந்தது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும், மேலும் பாதிப்புகள் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும், உடுமலை குறிஞ்சேரி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு, பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு ேஹாமம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.