சிதிலமுற்ற கோயில் புனரமைக்கப்படுமா?
ADDED :2040 days ago
மதுரை : கள்ளிக்குடியில் சேதமடைந்த பழமையான மீனாட்சி அம்மன் கோயிலை புனரமைக்க வேண்டும், என, ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியது. மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: இக்கோயில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட 900 ஆண்டுகள் பழமையானது. சிதிலமடைந்த கோயிலை புனரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்க 2015 ல் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியானது. பணி நடக்காததால் நிதி வேறு பணிக்கு செலவிடப்பட்டது. சமீபத்தில் மின்னல் தாக்கி கோயில் சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர், என கூறியுள்ளார்.