கொரோனா தாக்கம் குறைய கோவிலில் அகண்ட தீபம்
ADDED :1967 days ago
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே கொரோனா தாக்கம் குறைய கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் குறையவும், பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய வேண்டியும் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 30 நாட்களாக அகண்ட தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 48 நாட்கள் ஏற்றப்படும் இந்த விளக்கு கடந்த 30 நாட்களாக தொடர்ந்து 24 மணி நேரமும் எரிந்து வருகிறது.