ஸ்ரீ கமலசாயி சமிதி நிவாரண உதவி
ADDED :1966 days ago
புதுச்சேரி; ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோதுமை பாக்கெட் கொடுக்கும் பணியை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு புதுச்சேரி பிள்ளைச்சாவடி ஸ்ரீகமலசாயி சமிதி சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாநிலம் முழுவதும் வாழ்வாரத்தை இழந்த ஏழை மக்களுக்கு கோதுமை பாக்கெட் அடங்கிய நிவாரண பை வழங்க, ஸ்ரீகமலசாயி சமிதி முடிவு செய்துள்ளது.இப்பணியை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிள்ளைச்சாவடி ஸ்ரீகமலசாயி சமிதி தலைவர் குணசேகரன், ஓரியண்டல் இன்சூரன்ஸ் வளர்ச்சி அதிகாரி பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.