உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் தொழுகை தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் தொழுகை தலைமை காஜி அறிவிப்பு

சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக, ரமலான் பெருநாள் தொழுகையை, வீடுகளில் நடத்தி கொள்ள, அரசு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும், 24 அல்லது, 25ம் தேதிகளில், ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு தலைமை காஜி ஸலாஹூத்தீன் முகமது அய்யூப் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாடு முழுதும், கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கு அமலில் உள்ளது. வரும், 31 வரை, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், முஸ்லிம்கள் அவரவர் வீடுகளில், ரமலான் நோன்புக்கான தொழுகைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலத்தில், ரமலான் பண்டிகை வருவதால், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில், ரமலான் பண்டிகை நாளின் காலையில், தொழுகை நடத்தி கொள்ளவும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !